குண்டுமழை எதிரொலி...இந்தியா கொடுத்தது அடி இல்ல செம இடி: வெளிவராத பிரத்யேக தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இன்று காலை இந்திய விமானப்படை குண்டு மழைகளை பொழிந்து தீவிரவாத முகாம்களை அழித்தது.

சுமார் 21 நிமிடங்களில் பாலாகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

வெளிவராத பிரத்யேக 4 தகவல்கள்
  • பொதுமக்களை பாதிக்காத வகையில் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது என இந்திய வெளியுறத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
  • ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து விஜய் கோகலே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இந்த தாக்குதல் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரானது மட்டுமே என அதிகாராப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
  • ஏனெனில், புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை முறியடிக்கவே இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.
  • மேலும், தீவிரவாத இயக்கம் எங்கெல்லாம் இயங்கி வருகிறது என்பது குறித்து ஆராய்ந்து ஆதாரப்பூர்வமான தகவல்களை பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கியிருந்தபோதும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இந்தியா அதிரடி நடவடிக்கையில் இறங்கியது என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்