மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்... இந்தியா திடீர் தாக்குதல் நடத்தியது குறித்து பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ஜெய்ஷ் இ முகமது இயக்கம் மற்றொரு தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் கிடைத்த நிலையில் அதை தடுக்கவே இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே விளக்கமளித்துள்ளார்.

இந்திய விமான படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம் அழிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தாக்குதலை இந்தியா திடீரென மேற்கொண்டது குறித்து வெளியுறவு துறை செயலர் விஜய் கோகலே விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாலாகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் உறவினரும் கொல்லப்பட்டுள்ளார்.

20 ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி பயிற்சி முகாம் செயல்பட்டு வருகிறது.

இது போர் நடவடிக்கை கிடையாது, தீவிரவாதிகள் முகாம்கள் மீதான தாக்குதல் மட்டுமே என கூறியுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்