இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்! வீரர்கள், போர் விமானங்கள் குவிப்பு- இரு நாடுகளும் அவசர ஆலோசனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்தி வந்த தொடர் தாக்குதலில் தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

எல்லை பகுதிகளில் தயார் நிலையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது, முதற்கட்டமாக 10000 ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.

ஏனெனில், 40க்கும் மேற்பட்ட சிஆர்எப் இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா எங்கள் மீது வீண் பழி சுமத்தி தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில் தான் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த தீவிரவாத முகம் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் பதற்றம் ஏற்பட்டிருப்பதால் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மட்டுமின்றி அனைத்து எல்லையிலும் உஷார் படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்