இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதல்! ராகுல்காந்தி-கெஜ்ரிவால் வாழ்த்து

Report Print Kabilan in இந்தியா

இந்திய ராணுவத்தின் விமானப்படை இன்று அதிகாலை தீவிரவாத முகாமை அழித்ததைத் தொடர்ந்து, இந்திய கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை விமானப்படை வீரர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் அமைப்பட்டிருந்த தீவிரவாதிகளின் முகாமை, இந்திய ராணுவ விமானப்படை இன்று அதிகாலை குண்டு வீசி தாக்கி அழித்து, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு தமது வாழ்த்தினை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டரில், ‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்’ என தெரிவித்துள்ளார். அதே போல் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில், ‘பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்கிய இந்திய விமானப்படையின் விமானிகளுக்கு சல்யூட்’ என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறையோ, இந்திய விமானப்படையோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்