பாகிஸ்தான் எல்லையில் இந்திய இராணுவம்.. 1000 கிலோ குண்டுகள்! பிரான்சில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் என வெளியான முழுத் தகவல்

Report Print Santhan in இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிரான்சில் உருவாக்கப்பட்ட மிராஜ் 2000 விமானம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி காலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்துள்ளது.

இதன்மூலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்தியா இராணுவம் எதை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பிரான்சில் உருவாக்கப்பட்ட மிராஜ் 2000 விமானம்தான் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மொத்தம் 12 மிராஜ் 2000 விமானங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிராஜ் 2000 விமானம் ரபேல் ரக விமானத்தின் குடும்பத்தை சேர்ந்தது ஆகும். ஆனால் ரபேல் மிராஜ் 2000 விட அதிக திறன் வாய்ந்தது. இந்த விமானத்தை உருவாக்கியது பிரான்சில் இருக்கும் டஸால்ட் நிறுவனம் ஆகும். இந்த பிரான்ஸ் நிறுவனமான டஸால்ட்தான் இந்தியாவிற்கு ரபேல் விமானங்களையும் வழங்க உள்ளது.

1972-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இது சிங்கிள் என்ஜின் கொண்ட 4-வது தலைமுறை விமானம் ஆகும். ஆனால் கடந்த மூன்று வருடம் முன் புதிய தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்யப்பட்டது. இதன் புதிய மாடலான மிராஜ் 2000என் மற்றும் 2000டி ஆகிய விமானங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

மிராஜ் 2000-ல் செய்யப்பட்ட அப்டேட்கள் மூலம் இது மல்டி ரோல் அப்டேட்டாக மாறியுள்ளது. மொத்தம் இந்தியா உட்பட 9 நாடுகள் இதை பயன்படுத்தி வருகிறது.

இது அதிகபட்சம் 2,336 கிமீற்றர் வேகம் செல்ல கூடியது. மொத்தமாக ஒரே அடியாக இது 1,550 கி.மீற்றர் தூரம் செல்ல கூடியது. 17,060 மீற்றர் உயரம் வரை செல்ல கூடியது

இது 13,800 கிலோ எடை வரை சுமந்து சென்று தாக்க கூடியது. இதன் தனிப்பட்ட எடை 7,500கிலோ ஆகும். அதனால் 19000 கிலோ எடை வரை இது மொத்தமாக இருந்தாலும் எந்த பாதிப்பும் இன்றும் பறந்து செல்லும். அப்படித்தான் இன்று 1000 கி லோ எடை பொருட்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தி இருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்