தேனிலவு முடிந்து ஊருக்கு வந்த உடனே புதுமாப்பிள்ளை தற்கொலை... மனைவி குறித்து எழுதியிருந்த பகீர் கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்கமாலிஜித். இவருக்கும் நீரு என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 20ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

ஹர்கமாலிஜித்தும், நீருவும் மலேசியாவுக்கு தேனிலவு சென்ற நிலையில் சமீபத்தில் தான் ஊருக்கு திரும்பினார்கள்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஹர்கமாலிஜித் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹர்கமாலிஜித்தின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், என் மனைவி நீரு, திருமணம் ஆனது முதலேயே நானும் என் குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்துகிறோம் என பொலிசில் பொய் புகார் கொடுப்பேன் என மிரட்டி வந்தார்.

என் தந்தையை எரித்து விடுவேன் என கூறினார்.

இதோடு என் குடும்பத்தை அழித்துவிடுவேன் எனவும் மிரட்டினார் என எழுதப்பட்டுள்ளது.

மேலும் நீருவுக்கு கனடாவை சேர்ந்த ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாவும், அதே போல உள்ளூரை சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்த ஹர்கமாலிஜித்தின் தந்தை அமர்ஜித் சிங்கின் அளித்த புகாரில், தனது மகன் மரணத்துக்கு நீரு தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையிலும், ஹர்கமாலிஜித் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையிலும் பொலிசார் புதுப்பெண் நீருவை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்