தவறான வீடியோ...நடுத்தெருவில் நின்ற மாணவி: நடந்த சம்பவத்தின் பின்னணி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி தவறாக வீடியோ எடுக்கப்பட்டதையடுத்து காதலன் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சபரிராஜன் என்பவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் வாயிலாக 19 வயதான மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவியும், சபரிராஜனின் காதல் வார்த்தைகளை நம்பி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியை தனியாக ஒரு இடத்திற்கு வருமாறு சபரிராஜன் அழைத்துள்ளார்.

அங்கு காரில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை தவறாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதையடுத்து கழுத்தில் உள்ள செயினை பறித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

எங்கு இருக்கிறோம் என தெரியாத மாணவி, அருகில் இருப்பவர்களின் உதவியோடு வீட்டுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டி மிரட்டியுள்ளார் சபரிராஜன்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் 3 பேரும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீது பாலியல் தொந்தரவு செய்தல், படம் எடுத்து மிரட்டுதல், நகை பறிப்பு, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்