வெளிநாட்டில் இருந்து ஆசையாக வந்த மகள்: கொடூரமாக அடித்து கொலை செய்த தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

அமெரிக்காவில் வசித்து வந்த மகள் ஒருவர் இந்தியாவில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க வந்த இடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேவிட் மசி என்பவர் தனது மனைவியுடன் பஞ்சாப்பில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பொறியியலாளர் ஆவார்.

இவர் சமீபகாலமாக மன அழுத்தத்தில் உள்ளார். இந்நிலையில் இவரது மகள் நிலோபர் தனது பெற்றோரை பார்க்க வேண்டும் எனற ஆசையில் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று ஞாயிற்றுக்கிழமை தாய் தேவாலயத்திற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இருந்த தந்தை இரும்பு கம்பியை எடுத்து தனது மகளின் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்,

பின்னர், தானும் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த தாய் இருவரும் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆனால், எதற்காக இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்