பயங்கரவாத தாக்குதல்: இந்திய ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்? வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணமாவர்கள் தொடர்பில் தகவல் வெளியான நிலையில் அவர்களை வேட்டையாடும் பணி தீரவம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய நபரான காஸி பாகிஸ்தானில் உள்ள கைபர் பகுதியை சேர்ந்தவன்.

அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கானும் அதே பகுதியை சேர்ந்தவர் தான். காஸிக்கும் லஷ்கர் இ தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் சயீதுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது.

காஸிக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சியை குஹாஷியே அளித்துள்ளான். பாகிஸ்தான் பழங்குடி பகுதிகளில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய அனுபவம் உள்ளவன்.

பாடசாலைகளிலும், கல்லுாரிகளிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்ட முயன்றவன்.

ஆதில் அகமது தர் என்பவனுக்கு தற்கொலை படை தாக்குதல் நடத்த தேவையான பயிற்சி, வெடிமருந்து கொடுத்தது காஸி தான்.

ஆதில், முன்பு அல் கொய்தாவில் இயங்கி விட்டு, பின்பு ஜெ.இ.எம்.,முக்கு மாறியவன். குஹாஷிக்கும் காஸிக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன்களுடன் தொடர்பு இருந்தாலும், இவர்களை கட்டுப்படுத்துவது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தான்.

ஆப்கனிஸ்தானில் அமைதி ஏற்பட அமெரிக்க தலைமையில் அங்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் பின்னணியில் தான் காஷ்மீரில் தாக்குதல் நடந்துள்ளது.

ஆப்கனிஸ்தானில் ஏராளமான முதலீடுகளை செய்து பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

இதையும் சீர்குலைக்கும் விதமாகத் தான் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆப்கனில் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்களுடன் பாகிஸ்தான் ராணுவ துணையோடு அமெரிக்கா பேசி வருகிறது.

இந்நிலையில் ஆப்கனிஸ்தானில் இருந்த பயங்கரவாதம் காஷ்மீருக்கு மாறி விடக்கூடாது என்ற அச்சமும் நிலவுகிறது.

தற்கொலை படை தாக்குதல் நடத்துவது தலிபன் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயங்களின் வழக்கம்.

புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலும் இந்த பாணியில் தான் நடந்துள்ளது. காஷ்மீரில் பணிபுரிந்த ஒரு ராணுவ அதிகாரி கூறும்போது, இது ஒரு கவலை அளிக்கும் விடயம்.

வெடிமருந்தை நிரப்பிய வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் மோத வைக்க முடியும். அதை முன் கூட்டியே அறிந்துகொள்வது கடினம் என்றார்.

சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை உள்ளூர் ஆட்கள் மூலம் வாங்கி, வெடிமருந்து தயாரிப்பது தான் பொதுவான வழக்கம்.

ஆனால், புல்வாமா தாக்குதலில், அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானில் உள்ள ஜெ.இ.எம்., செய்து தந்துள்ளது.

தற்கொலை படை தாக்குதல் நடத்துவோருக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers