சிதறி கிடந்த இராணுவ வீரர்களின் உடல்கள்....கேட்க முடியாத கதறல் சத்தம்: கடைசி நிமிடங்கள் குறித்த உருக்கமான பேச்சு

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்மாவா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி நடந்த தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுமார் 70 வாகனங்களில் பணிக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது 350 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் இடையில் உள்ள வீரர்களின் வாகனத்தில் மோதி வெடித்து சிதறியது.

இதில், 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலை நேரில் பார்த்த சகவீரர்கள் உருகவைக்கும் தகவல்கள் பகிர்ந்துள்ளனர்.

ஜஸ்விந்தர் பால் என்கிற வீரர் பகிர்ந்துகொண்டதாவது, வெடித்து சிதறிய வாகனத்தில் இருந்து இரண்டு வாகனங்கள் தள்ளிதான் நான் இருந்தேன். குண்டு வெடித்ததும் நாங்கள் அனைவரும் பதறிப்போய் வாகனத்தில் இருந்து ஓடிப்போய் பார்த்தோம்.

சாலைகள் முழுவதும் இறந்துபோன எங்களது வீரர்களின் உடல்கள் சிதறிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தோம், காயமடைந்தவர்களின் கதறல் சத்தத்தை கேட்கவே முடியவில்லை. உடனடியாக காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி அளித்தோம், தாக்குதல் நடந்த இடத்தில் ஒருவித மாயான அமைதி நிலவியது என கடைசி நிமிடங்களை பகிர்ந்துள்ளார்.

டேனிஷ் சந்த் என்ற வீரர் கூறியதாவது, நான் குண்டு துளைக்காத வாகனத்தில் இருந்தேன். தாக்குதல் நடந்த 3 நாட்களாக எனக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரியாமல் எனது குடும்பத்தார் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

3 நாட்கள் கழித்துதான் நான் உயிரோடு இருப்பது எனது குடும்பதினருக்கு நண்பர் மூலமாக தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers