அவன் எதிர்பார்க்காத பதிலடி கொடுக்கணும்: ஆவேசமாக பேசும் தமிழக ராணுவ வீரர்

Report Print Vijay Amburore in இந்தியா

புல்வாமா தாக்குதலில் சம்மந்தப்பட்ட பயங்கரவாதிகள் மீது எதிர்பார்க்காத பதிலடி கொடுக்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பேசும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது என்கிற பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியனும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் மரணமடைந்திருந்தனர்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்ததோடு, பயங்கரவாத அமைப்பிற்கு தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவிட்டனர்.

அதேசமயம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் தொடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் தமிழக வீரர் ஒருவர் பேசும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எதிர்பார்க்காத பதிலடி கொடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, துப்பாக்கியை கையில் பிடித்தவாறே நிற்பதற்கு நாங்கள் என்ன பொம்மையா? என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...