இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய முக்கிய ஆயுதம்! அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

ஜம்மு காஷிமீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் அம்மாநிலம் எப்படி இருக்கிறது, தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு எதை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 14-ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்த நிலையில், தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் திவிரவாதிகள் இருப்பதாக இராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால், தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இதையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டதில் சில அதி நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக புல்வாமா தாக்குதலுக்கு தகவல்களை பறிமாறிக் கொள்ள பயங்கரவாதிகள் அதிநவீன தகவல் பரிமாற்ற சாப்ட்வேர்கள் மற்றும் ஆப்களை பயன்படுத்தியுள்ளனர்.

Dark web என்ற சாப்ட்வேர் மூலம் ஒய்எஸ்எம்எஸ் ஆப்பை பயன்படுத்தி தகவல்களை பரிமாறியுள்ளனர்.

மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் கொண்ட மொபைல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நவீன சாப்ட்வேர்களில், புல்வாமா தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்ற விபரங்கள் முழுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் எந்த ஒரு பிரச்சனை இல்லை எனவும் அங்கிருக்கும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers