இந்தியாவையே நடுங்க வைத்த தீவிரவாதியின் கொடூர தாக்குதல்! இன்போசிஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் பரிதாபமாக இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று இன்போசிஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்தியாவையே இப்படி ஒரே தாக்குதல் மூலம் கண்ணீர் சிந்த வைத்த தீவிரவாதிகளை தேடிச் சென்று அழிக்க வேண்டும் என்ற கருத்து இந்திய மக்களிடையே நிலவி வருகிறது. அதன் முதல் முயற்சியாக இன்று இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளில், இந்திய இராண்டு பேரை சுட்டுக் கொன்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து தங்களுடைய மகன், கணவன்களை தீவிரவாதிகளின் தாக்குதலால் இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பல்வேறு இடங்களில் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இன்போசிஸ் அறக்கட்டளை இறந்த ஒவ்வொரு இராணுவவீரரின் குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாய் தரப்படும் என்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers