மரணமடைந்த ராணுவ வீரர்களுக்காக திருமணத்தில் புதுமணத்தம்பதியினர் செய்த காரியம்

Report Print Vijay Amburore in இந்தியா

காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலை படை தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பயங்கவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் புதுமணத்தம்பதியினர் பதாகைகள் ஏந்தி திருமண ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது என்கிற பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இந்தியாவில் ஜம்மு துவங்கி கன்னியாகுமரி வரை பதாகைகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பயங்கவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் குஜராத்தை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் திருமண ஊர்வலத்தில் பதாகைகளை ஏந்தியபடி சென்றுள்ளனர்.

அந்த பதாகையில், "இந்தியாவில் 1427 சிங்கங்கள் மட்டுமே இருக்கிறது என்று யார் கூறியது? எல்லையில் 13 லட்சம் சிங்கங்கள் நாட்டை பாதுகாக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளது" என வீரர்களைக் குறிப்பிடும் வகையில் பெருமைப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...