தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: இந்திய இராணுவம் பதிலடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷித் காலி இந்திய இராணுவனத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் பல மணிநேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் இதற்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சண்டை நடந்துள்ளது.

இந்த சண்டையில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையோருக்கு இவர்கள் இருவரும் உதவியதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காகவே பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு இவர்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காம்ரான் என்ற மற்றொரு தீவிரவாதி குறிபார்த்து சுடுவதில் கைதேர்ந்தவர். இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

5 தீவிரவாதிகள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மறைந்திருப்பதாக உளவுத்துறை மூலம் இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கே சென்று இராணுவனத்தினர் துப்பாக்கியால் தீவிரவாதிகளை சுட்டுள்ளனர்.

இதில், இவர்கள் இரண்டு பேரும் இறந்துவிட்டதாக அவர்களது உடல்களை வைத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers