போர் வந்தால் பார்த்துக்கொள்வோம் என்று கூறிய ரஜினி இப்போ போலாமே..சீமானின் சரமாரி கேள்வி

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னரோ, இப்போது எல்லைக்கு போகலாமே என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

வரும் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் தன்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது என்றும் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஒவ்வொருவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் அறிக்கை பற்றி கூறுகையில், இது ரஜினியிடம் எதிர்பார்த்த ஒன்று தான், ஆனால் ஒரு தலைவர் அவர்களின் ஆதரவாளர்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும்.

இதுவே ஒரு சிறந்த தலைவனுக்கு அழகு, அதை விடுத்து யார் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது, ஒரு பொறுப்பற்ற பேச்சு என்று தான் கூற வேண்டும்.

ஒரு தலைவன் தான் பிரச்சனையை பற்றி ஆராய வேண்டும், தொண்டன் அந்த பிரச்சனையைப் பற்றி ஆராய்ந்தால் தலைவன் என்கிற ஒருவன் எதற்கு? தலைவன்தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அந்த வழி இல்லாதது ஒரு கேள்வியாக எழுகிறது.

மேலும் இப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடட்டும், அப்போது அவர் வந்து தீர்ப்பாரா என்று பார்க்கலாம்.

ரஜினி போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினாரே, இப்போது எல்லை போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது, ரஜினி அங்கு செல்லட்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers