தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! அதிரடி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்

Report Print Kabilan in இந்தியா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலையை திறக்கலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

அதன் பின்னர் அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்கலாம் என்று தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து விசாரணைகளும், வாதங்களும் முடிவடைந்த நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால தடை விதித்ததுடன், வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும், ஆலையை மூட உத்தரவிடப்பட்ட அரசாணை செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers