இறந்துபோன தமிழக வீரரின் ஆசை இதுதான்: கர்ப்பிணி மனைவி உருக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சிவசந்திரனின் ஆசை குறித்து அவரது மனைவி பகிர்ந்துள்ளார்.

அவரின் வருமானத்தை வைத்துதான் எங்களது குடும்பம் வாழ்ந்து வந்தது. தற்போது அவர் எங்களை விட்டு சென்றுவிட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தை இருக்கிறது. அவர் அடிக்கடி மகனுக்கு சல்யூட் அடிப்பார். அவனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

அவர் உயிரோ இருந்திருந்தால் கண்டிப்பாக ஆசை நிறைவேறியிருக்கும். எனவே எனது கணவரின் ஆசையை நிறைவேள்ள மாநில மத்திய அரசுகள் உதவி செய்ய வேண்டும்.

நான் உயிருடன் இருக்கும் போது என்னுடைய மரியாதை தெரியாது. நான் இறந்த பின்பு தான் தெரியும் என்று என்னிடம் கூறுவார்.

இப்போது அவர் இறந்ததால் மத்திய மந்திரி, மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் அதை பார்க்க அவர் இல்லையே என கண்ணீர் சிந்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers