140 போர் விமானங்கள்....இரவு பகலாக அதிரவைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை வீடியோ: விரைவில் தாக்குதல் ஆரம்பம்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

புலவாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா செயல்பட்டு வருகிறது.

40 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தி வருகிறது.

‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.

மிக்-29 தாக்குதல் ரக விமானம், சுகோய்-30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21 பைசன், மிக்-27, ஐ.எல்.78, ஹெர்குலிஸ், ஏ.என்.32 போன்ற விமானங்களும் இந்த ஒத்திகையில் சிறப்பாக செயல்பட்டன.

ஹெர்குலிஸ் போர் விமானம் குறுந்தொலைவு கொண்ட ஓடு தளத்தில் ஏறி இறங்கி வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

மிகவும் பரபரப்பான சூழலில் நடந்த இந்த போர் ஒத்திகையை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, ராணுவ தளபதி பிபின் ராவத், முன்னாள் கிரிக்கெட் வீரரும், விமானப்படையின் சிறப்பு கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஏராளமான விமானப்படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விமானப்படையின் ’குண்டூசி முனையளவு துல்லிய’ திறனை பறைசாற்றும் விதமாக இந்த ஒத்திகை நடந்ததாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers