மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள்! இந்திய அரசை எச்சரித்த பயங்கரவாதியின் தந்தை

Report Print Abisha in இந்தியா

காஷ்மீரில் தமிழர்கள் உட்பட 45 வீரர்களை கொன்ற, தீவிரவாதி அடில் அகமது தந்தை காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாணவில்லை என்றால் கடும் விளைவுகள் நேரிடும் என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் துணை ராணுவபடை வீரர்கள் 46பேர்இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இறப்பிற்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த அடில் அகமது தர் –ன் பெற்றோரைஎக்ஸ்பிரஸ் குழுவினர் சந்தித்துள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து அடிலின் தந்தை குலாம்ஹாசனிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் அவர்.

இத்தனைபேரின் உயிரிழப்பு வருந்துவதற்கு உரியது. தீவிரவாதியாக இருந்தாலும் வீரர்களாக இருந்தாலும் இழப்பு ஒன்றுதான் என்று ராணுவ வீரர்களுடன் தனதுமகனை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும், காஷ்மீர் பிரச்சனைக்கு இந்திய அரசு உடனடி தீர்வு காணவில்லை என்றால், இன்னும் அதிகமான இளைஞர்கள் இந்த அமைப்பு மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாங்கள் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கவில்லை. செய்திகளில் கூறிய பின்தான் என்னுடைய மகன் இறந்துள்ளான் என்பது தெரிந்தது என்றும். இங்குள்ளஇளைஞர்கள் பயங்கரவாதத்தில் இணையும் வகையில் அழுத்தம் உள்ளது என்றும், ஒரு மகனுக்கு தந்தையாக பதிலளித்துள்ளது.

மேலும் இறந்த தீவிரவாதிக்கு நேற்று சிறப்பு தொழுகைகள்நடத்தப்பட்டு அதில் அந்த கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers