தக்க பதிலடி கொடுக்க 100 இளைஞர்களை களத்தில் இறக்குகிறோம்: முன்மாதிரி இளைஞரை இழந்த கிராமத்தின் பதில்

Report Print Abisha in இந்தியா

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு பதிலடி கொடுக்க கிராமத்திலிருந்து 100 இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழனன்று மாலை மூன்று மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 46 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தீவிரவாதத் தாக்குதலில் தமிழகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும் வீரமரணம் அடைந்தார்.

சுப்பிரமணியனுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களே ஆகியுள்ளது. திருமணமான ஒன்றரை வருடத்திலேயே சுப்பிரமணியன் இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த சுப்பிரமணியனின் குறித்து அந்த கிராம மக்களிடையே நல்ல கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக அவர் இராணுவத்தில் சேர்வதற்கு முன்பு விவசாயம் செய்ததாகவும். நாட்டை பற்றி அதிகம் அக்கரை கொண்டவர் என்று பலர் தெரிவித்துள்ளனர். ஊரில் சிறியவர் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார் என்றும் கூறுகின்றனர்.

மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்த சுப்பிரமணியன் தை பொங்கல் திருவிழாவையொட்டி பல்வேறு விளையாட்டுகளை நடத்தியுள்ளார்.

இது குறித்து, கிராமத்து இளைஞர்கள் கூறியது, ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக எங்களது ஊரைச் சேர்ந்த நூறு இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து தக்க பதிலடி கொடுப்போம். இந்த சுப்பிரமணியனை போல் மேலும் பல இளைஞர்கள் இந்த கிராமத்தில் உருவெடுத்து வருவார்கள் என மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers