அமெரிக்கா சிகிச்சை முடிந்து தெம்பாக சென்னை திரும்பினார் விஜயகாந்த்! வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார்.

இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் விஜயகாந்த் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் வருகையையொட்டி தேமுதிக தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers