மகனின் மரணம் பொய்யாகிடாதோ... நெஞ்சை உருக்கும் ஒரு தமிழக தாயின் கண்ணீர் வார்த்தைகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள்.

அவர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள். இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய சுப்ரமணியனின் தாய் கதறும் வார்த்தைகள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது,

சுப்பிரமணியன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சுப்ரமணியனின் குடும்பத்தினருக்குத் தகவல் சென்று சேர்ந்ததும் சவலப்பேரி கிராமத்தினர் துக்கத்தில் இருக்கிறார்கள்.

சுப்பிரமணியனின் தாய் உதிர்த்த வார்த்தைகள்

அய்யா எம்மவன் போன ஞாயித்துக்கிழமைதான்யா ஊருக்குத் திரும்பிப் போனான். அவன் வந்திருந்த ஒரு மாசமும் எப்படிக் கழிஞ்சதுன்னே தெரியல.

வியாழக்கிழமை எனக்குக் கண் ஆபரேஷன் பண்ண ஆஸ்பத்திரிக்குக் கூடவே வந்திருந்தான். வெள்ளி, சனி ரெண்டு நாளும் எல்லார்கூடவும் சந்தோஷமா இருந்துட்டு ஞாயித்துக்கிழமைதான்யா திரும்பவும் லீவு முடிஞ்சு வேலைக்குக் கிளம்பிப் போனான்.

நேத்து மதியம்கூட என் மருமகள் கிருஷ்ணவேணிக்குப் போன் பண்ணி பேசியிருக்கான். அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம்தான் ஆகுது. இன்னும் கொழந்த குட்டிகூட இல்ல. இப்போ வந்துருந்தவன்கிட்டக்கூட தூக்கிக் கொஞ்ச வாரிசு வேணும்டா.

என் கண் காண நான் அதுங்களைப் பாத்துட்டுப் போயிடனும்டான்னு சொல்லிட்டு இருந்தேன். அதுக்குள்ள இப்புடி ஆயிடுச்சேய்யா.

இதெல்லாம் கனவா போயிடக் கூடாதா. பொய்யாகிடக் கூடாதான்னு மனசு கெடந்து அடிச்சிக்கிது. அவன் பொண்டாட்டியும் அம்மாவும் அழுகுறதை என் கண் கொண்டு பார்க்க முடியல சாமி என்று கதறியது மனதை உருக்கும் வகையில் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers