பழிக்குப்பழி வாங்குவோம்... தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி: சிஆர்பிஎப் சூளுரை: மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம். 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழி வாங்குவோம் என சிஆர்பிஎப் சபதம் செய்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்த சிஆர்பிஎப் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த எங்கள் வீரர்களை வணங்குகிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்போம். இந்த கொடூர சம்பவத்தை நாங்கள் மறக்கவும் மாட்டோம்.

தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிச்சயம் பழிவாங்குவோம். வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, சிஆர்பிஎப் படையின் அனைத்து முகாம்களிலும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஆர்பிஎப் கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது என கூறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers