தமிழர்கள் உட்பட 44 பேரை பலிவாங்கிய பயங்கரவாத தலைவன் தொடர்பில் வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் 44 துணை ராணுவத்தினரை பலிவாங்கிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார், தமது குடும்ப உறுப்பினர்களையே தீவிரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-எ-முகம்மது எனும் பெயரிலான தீவிரவாத இயக்கத்தை துவக்கி நடத்தி வருபவர் மசூத் அசார்.

ஹிஜ்புல் முஜாகித்தீன், லஷ்கர்-எ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-எ-முகம்மது ஆகிய மூன்றும் பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு நிதி மற்றும் ஆயுதங்கள் உதவியுடன் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள். இவர்களில் எந்த அமைப்பு பெரியது என்பது இதுவரையிலும் அடையாளம் காண முடியாமல் உள்ளது.

இவர்களில் ஜெய்ஷ்-எ-முகம்மது அமைப்பு ஹுஜ்புல் முஜாஹித்தீன் உதவி மற்றும் உத்தரவின் பேரில் கடந்த காலங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.

மூன்று அமைப்புகளிலும் மசூத் அசார் அதிக தீவிரம் காட்டுபவர். தன் அமைப்பின் தீவிரவாத தாக்குதலுக்காக தன்னுடைய குடும்பத்தினரையும் ஒருவர் பின் ஒருவராகப் பயன்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முதல் சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட மசூத் அசாரின் சகோதரி மகனான தலா ராஷீத்தை இந்திய ராணுவம் காஷ்மீரில் என்கவுண்டர் செய்திருந்தது.

அடுத்து மற்றொரு சகோதரியின் மகனான முகம்மது உஸ்மானும் தீவிரவாத தாக்குதலுக்கு முயன்ற போது இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

மூன்றாவதாகவும் மசூத் அசார் தன் சகோதரரான அப்துல் ரவுப் அஸ்கர் என்பவரை தீவிரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நாக்ரோட்டா தாக்குதலில் ரவுப் அஸ்கர் பெரும்பங்கு வகித்தார். இதற்காக தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரவுப்பை தேடி வருகின்றனர்.

தற்போது புல்வானாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு சற்று முன்பாக பாகிஸ்தானின் பஞ்சாபில் பேசிய அசாரின் சகோதரர் ரவுப்,

இந்திய நீதிமன்றத் தீர்ப்பால் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் தியாகத்திற்கு பழி வாங்குவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையில், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலால் மசூத் அசார் 2004 ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை முடக்க வேண்டியதாயிற்று.

எனினும், அப்போது தன் இயக்கத்தை ‘பாகிஸ்தானின் தாலீபான்’ மற்றும் ‘தெய்ரீக்-ஏ-தாலீபான்’ எனும் இரண்டு பெயர்களில் மாற்றி செயல்படுத்தி வந்துள்ளார்.

பிறகு மீண்டும் மசூத் அசாருக்கு பாகிஸ்தானுடன் சேர்த்து சீனாவின் ஆதரவும் கிடைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இதனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வற்புறுத்தியும் அசாரை தனது கறுப்பு பட்டியலில் சேர்க்க சீனா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers