குழந்தையின் கண்முன்னே மருமகளின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த பெண்: பயங்கரமான சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திர பிரதேசத்தில் 4 வயது மகளின் கண்முன்னே, 6 வயது மகளின் கழுத்தை அறுத்து ரத்தை குடித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வதம்லா ரஸ்மோ (30) என்பவர் தன்னுடைய கணவர் சிரஞ்சீவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபித்து கொண்டு, சகோதரரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

அங்கு வீட்டு வேலை செய்யாமல் வெட்டியாக இருந்த ரஸ்மோவை, கணவர் வீட்டிற்கு செல்லுமாறு அவருடைய மைத்துனி சின்னம்மி திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஸ்மோ, உன்னுடைய குழந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் அவருடைய மைத்துனி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் ரஸ்மோ, சின்னமியின் 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களையும் மலைபகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு 6 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தை குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனை நேரில் பார்த்து பயந்துபோன 4 வயது சிறுமி அங்கிருந்து தப்பி, உறவினர்களிடம் நடந்தவை பற்றி கூறியிருக்கிறார்.

இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு சென்ற ஊர்மக்கள், ரஸ்மோவை பிடித்து மரத்தில் கட்டி வைத்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ரஸ்மோவை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers