பதில் தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா: நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்ய பிரதமர் அனுமதி!

Report Print Vijay Amburore in இந்தியா

புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகளுக்கு நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை முடிவு செய்ய பிரதமர் மோடி அனுமதி வழங்கியிருக்கிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் தற்கொலைப்படை வீரன் 350 கிலோ வெடிமருந்து கொண்ட பொருட்களை இந்தியாவின் சி ஆர் பி எஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்து காரின் மீது செலுத்தி வெடிக்க செய்துள்ளார்.

இதில் இந்திய வீரர்கள் 45 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும், பலரும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் துவங்கி பல அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் பேசியிருக்கும் பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகளுக்கு நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை முடிவு செய்வதற்கான அனுமதியானது ராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி குறிப்பிடுகையில், அண்டை நாடு ஒரு பிச்சைக் கிண்ணத்துடன் நகர்ந்து கொண்டு, புல்வாமா பயங்கரவாத தாக்குதலை ஒரு விரக்தி செயல் என விவரிக்கிறது என்றார்.

முன்னதாக இன்று அதிகாலை டெல்லி ரயில்வே நிலையத்தில் துவக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்தோர் மிகப் பெரிய தவறை செய்துவிட்டீர்கள். இதற்கான தக்க விலையை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும். இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நமது ராணுவத்தின் துணிவு மற்றும் வீரம் மீது முழுமையான நம்பிக்கை நம் மக்களுக்கு உள்ளது. இந்தியா நிச்சயம் தக்க பதிலடியை தரும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பெயர் குறிப்பிடாமல் பேசிய அவர், உலகில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நமது அயல்நாட்டினர், தந்திரங்கள் மற்றும் சதித்திட்டங்களால் இந்தியாவை சீர்குலைக்க முடியும் என்று நினைத்தால், அது ஒரு பெரிய தவறு. அவர்களுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...