இந்தியாவில் தீவிரவாத தாக்குதலினால் இறந்த தமிழக வீரர்கள் இரண்டு பேருக்கு தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் தற்போது வரை 44 பேர் பலியாகியிருப்பதாகவும், மேலும் 40 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த 44 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றொருவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தல 20 லட்சம் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.