இந்தியாவின் மீது இப்படி ஒரு வெறித்தனமான தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணம்? அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி, நம்முடைய தாக்குதலால் இந்தியாவே அழற வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில், இராணுவ வாகனத்தின்மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரைக் கொண்டு மோதியதில், 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இப்படி ஒரு மோசமான தாக்குதலை நடத்தியவன் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஆதில் அகமது தார் தான் எனவும் 22 வயதான இவன் 2500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்துடன் ராணுவ வீரர்களின் கான்வாய்க்குள் புகுந்து, இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளான்.

இதையடுத்து இப்படி 44 பேரை துடி துடிக்க கொலை செய்ததை அறிந்த, அவரின் கண்டிபா கிராம மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளை கிராமத்திற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் ஜெய்ஷ் இ அகமது அமைப்பு, இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து ,தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பயன்படுத்தி வருகிறது.

2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி, லேத்போரா துணை ராணுவ பயிற்சி மையத்தின்மீது 4 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், 5 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில், பர்தீன் அகமது கான் என்ற 17 வயது இளைஞரும் கான்டிபாக் கிராமத்தைச் சேர்ந்தவன், அதே போன்று கடந்த 2000-ஆம் ஆண்டு ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான படாமி பாக் பகுதியில் துணை ராணுவ மையத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய அபாக் அகமது ஷாவும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவன் தான், இப்படி இந்தியாவின் மீது தொடர் தாக்குதலை நடத்தி ஜெய்ஷ் இ முகமது இயக்கம், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கொடுத்து வருகிறது.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மிகப் பெரிய தாக்குதலை அந்த இயக்கம் செய்துள்ளதால், இந்தியா கண்டிப்பாக தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் கமாண்டர் அப்துல் ரஷீத் காஷி மூளையாகச் செயல்பட்டுள்ளார்.

2001- ம் ஆண்டு, நாடாளுமன்றத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குரு, கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் திகதி தூக்கிலிடப்பட்டார்.

இதையொட்டி, மிகப் பெரிய தாக்குதல் நடத்த வேண்டும், அதைக் கண்டு இந்தியாவே அழற வேண்டுமென்று அப்துல் ரஷீத் காஷி அடிக்கடி கூறிவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...