கடைசி வரை குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த வீரர்! தீவிரவாதிகளின் வெறிசெயலால் இப்படி ஒரு பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்த வீரருக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் குழந்தை பிறந்துள்ளது, ஆனால் குழந்தையை அவர் கடைசி வரை பார்க்க முடியாமல் பரிதாபமாக இறந்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் தற்போது வரை 44 பேர் பலியாகியிருப்பதாகவும், இதில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தீவிரவாதி நடத்திய இந்த அதிர்ச்சி தாக்குதல் காரணமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இறந்த வீரர்களுகளின் குடும்பங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் படி சமூகவலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ராஜஸ்தானைச் சேர்ந்த Rohitash Lamba என்ற வீரர் பரிதாபமாக இறந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு அழகான குழந்தை பிறந்தநிலையில், அதை பார்க்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் இந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலினால் இறந்துவிட்டதால், கடைசி வரை தன் குழந்தையை பார்க்காமலே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers