தமிழர்கள் உட்பட 44 பேரை கொன்ற தீவிரவாதி இவன் தான்! எந்த நாட்டைச் சேர்ந்தவன்? வெளியான பரபரப்பு தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்திய நபர் யார், அவனுக்கு எப்படி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர்.

வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர். அதன் படி வீரர்கள் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அதில் 20 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் அடில் அகமது தர்(20) என்ற நபர் தான் என்பது தெரியவந்த நிலையில், அவரைப் பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அடில் அகமது ஜம்மு காஷ்மீரின் கண்டிபா பகுதியைச் சேர்ந்தவன், கண்டிபா தக்குதல் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீற்றர் தொலைவில் தான் உள்ளது.

அவரின் தந்தையின் பெயர் ரியாஸ் அகமது. அவர் அங்கு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருந்த அடில் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, அருகிலிக்கும் மில் ஒன்றிற்கு வேலை சென்று வந்துள்ளார்.

அப்போது இவரது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், அதன் மூலம் இவனுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கிடைத்துள்ளது.

அதன் பின் அவனை பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து மூளைசலவை செய்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு திடீரென காணாமல் போன அடில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சிப் பெற்றுள்ளான்.

அங்கு இருந்த பயங்கரவாத அமைப்பினர் அவனை தற்கொலை தாக்குதலுக்கு தயார் படுத்தியுள்ளனர். தயாராகிக் கொண்டிருந்த போதே, அவன் பெரிய தாக்குதல் ஒன்றிற்காக காத்து கொண்டிருந்துள்ளான்.

அதன்படி நேற்று இந்த தாக்குதலை நிறைவேற்றியுள்ளான். இவன், அந்த பயங்கரவாத அமைப்பின் சி பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி என பொலிசார் கூறியுள்ளார்.

உள்ளூர் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, அவர்களை தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்துவதை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தொடந்து செய்து வருகிறது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி, பர்தீன் அகமது கான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டான். இவனைப் போல உள்ளூரைச் சேர்ந்த 3 பேரை அந்த பயங்கரவாத அமைப்பு, தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக பொலிசார் கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் இறந்த 44 பேரில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers