40 வயது தாயை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த சிறுவன்: அதிர்ச்சி காரணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கொல்கத்தாவில் 17 வயது சிறுவன் தனது 40 வயது தாயை வீட்டுக்குள் அடைத்து உயிரோடு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகத்பூர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 17 வயது சிறுவன் தனது தாயிடம் விலை உயர்ந்த பைக் மற்றும் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான்.

இதற்கு தாய் மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சிறுவன் தனது தாயை வீட்டுக்குள் அடைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துள்ளார்,

இதில் 90 சதவீதம் காயமடைந்த தாய் உயிருக்கு போராடி வருகிறார். தாயை மருத்துவமனையில அனுமதித்த பக்கத்து வீட்டார் சிறுவனை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers