நாளை காதலர் தினம்! இன்று காதலுக்காக உயிரை விட்ட காவலர்... வெளியான சோக பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆயதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

சதீஸ் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறும் பெற்றோரிடம் தெரிவிக்கவே பெற்றோர் இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த சதீஸ் மீண்டும் பெற்றோரிடம் தனது காதலுக்கு பச்சைக்கொடி காட்ட மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே மனமுடைந்த சதீஸ் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த பொலிசார் சதீஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

நாளை பிப்ரவரி -14 உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers