ஒரு பெண்ணுக்கு 2,500 ஆயிரம் ரூபாய்: மாநிலம் கடந்து வேலைக்கு வந்த பெண்ணுக்கு நடந்த கதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெங்களூரில் இளம் பெண்மணி ஒருவர் வட இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு காதலர்கள் மட்டுமே செல்லக்கூடிய பார்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்திநகர் பகுதியில் செயல்பட்டு வரும் மெசஜ்டிக் ஹொட்டலில் ஜோடியாக மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அதாவது, ஒரு ஆணுக்கு ஒரு பெண் தேவையென்றால் 2,500 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும். ஜோடி இல்லை என்றாலும் அங்கே செல்லும்போது அவர்களுக்கு என்று ஒரு பெண் அனுப்பப்படுவார்கள்.

அப்பெண்ணை வைத்து அவர்கள் நடனம் ஆடலாம், பாடலாம் மற்றும் தவறாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் இந்த ஹொட்டலுக்கு வட இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்ட பெண் வேலை நிமித்தமாக விண்ணப்பித்துள்ளார். ஆபிஸ் வேலை என்று பெங்களூருக்கு வரவழைக்கப்பட்ட பெண் பாரில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.

செய்வதறியாது திகைத்த பெண் ஹொட்டலில் இருந்து அழுதுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் மீட்கப்பட்டு பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers