நெருக்கமாக இருந்த வீடியோவால் வந்த வினை! முன்னாள் காதலியை லாட்ஜிற்கு அழைத்து காதலன் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் முன்னாள் காதலியை லாட்ஜிற்கு வரவழைத்து காதலன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவின் Palghar மாவட்டத்தில் இருக்கும் Boisar பகுதியைச் சேர்ந்தவர் Faisal Saifi. 21 வயதான இவரும் இளம் பெண் ஒருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து வந்துள்ளனர்.

அதன் பின் காதலனின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தினால் அந்த பெண் இவரை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இருப்பினும் காதலித்த சமயங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து அந்த இளைஞன் இந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான்.

ஒரு சில சமயங்களில் அந்த வீடியோவை வைத்தே அவருடன் நெருக்கமாக இருந்துள்ளன். இதையடுத்து கடந்த 10-ஆம் திகதி அந்த பெண்ணை தொடர்பு கொண்ட இவன், நான் இதோடு வீடியோவை நீக்கிவிடுகிறேன்.

நீ குறிப்பிட்ட லாட்ஜிற்கு வரும் படி கூறியுள்ளான். அந்த பெண்ணும் குறித்த லாட்ஜிற்கு வந்த போது, இரவு முழுவதும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதனால் அந்த 12-ஆம் திகதி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க, பொலிசார் Faisal Saifi-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers