15 கோடி சொத்துக்காக 48 வயது பெண்ணை திருமணம் செய்த 25 வயது வாலிபர் : 11 பேர் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவனந்தபுரத்தில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் குறித்து தவறான தகவலை பரப்பிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள கண்டபுரத்தை சேர்ந்தவர் அனூப் (29). பஞ்சாப் விமான நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்,

இவர் சார்ஜாவில் பணிபுரிந்து வந்த ஜூபி (27) என்ற பெண்ணை காதலித்து பிப்ரவரி 5 ஆம் திகதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்து சில நாட்கள் ஆன நிலையில் இவர்களது புகைப்படம் வாட்ஸ் அப்பில் வைரலானது. புகைப்படத்துடன் சேர்த்து 15 கோடி சொத்துக்காக 48 வயது பெண்ணை 25 வயது வாலிபர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி புதுமணதம்பதியினரை மனவருத்தத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து சைபர் கிரைம் உதவியோடு இப்படியொரு தவறான தகவலை பரப்பிய 11 குரூப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers