மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த திருமண ஊர்வலத்தில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல்

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தின் தலித் சமூகத்தை சேர்ந்த பொலிசாரின் திருமண ஊர்வலத்தில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2 நாட்களுக்கு முன்னதாக தலித் சமூகத்தை சேர்ந்த பொலிசாரின் திருமண ஊர்வலம் நடைபெற்றது.

துகார் என்ற கிராமத்தின் வழியே ஊர்வலம் சென்றபோது ரஜபுத் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

ஊர்வலத்தில் சென்ற சிலர் இதனை தடுக்க முயன்ற போது, கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் மணமகன் உட்பட பலத்த காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் இதுகுறித்து மணமகன் சவாய் ராம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers