பொதுமேடையில் பலர் இருக்க பெண் அமைச்சரின் இடுப்பில் கை வைத்த நபர்! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பெண் அமைச்சரின் இடுப்பில் அமைச்சர் ஒருவர் கை வைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ஆம் திகதி திரிபுரா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த போது, விழாவில் மாநில முதல்வர் பிப்லப் தேப் மற்றும் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.

அப்போது தான் அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சந்தனா சக்மாவின் இடுப்பில் சக அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் கை வைத்து தள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில் மனோஜ் பின்னால் நகரும் போது சந்தனாவின் இடுப்பில் கை வைத்து நகர வைக்கிறார். உடனே, சந்தனா மனோஜ்ஜின் கையை தட்டி விடுகிறார்.

பிரதமர் இருந்த மேடையில் ஒழுங்கினமாக நடந்து கொண்டதால், அவர் பதவி விலக வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் கூறி வரும் நிலையில், அமைச்சர்கள் மனோஜ் காந்தி தேப் மற்றும் சந்தனா சக்மா கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers