அதிகாலையில் நடந்த கோர விபத்து: 17 பேர் உடல் கருகி பலியான சோகம்

Report Print Fathima Fathima in இந்தியா

டெல்லியில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஹொட்டலில் சுமார் 40 அறைகள் இருக்கின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட மளமளவென 4 மாடிகளுக்கும் பரவியது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை என்பதால் பலரும் உறங்கிக் கொண்டிருக்க, 17 பேர் உடல் கருகி பலியானார்கள், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers