மகனை காப்பாற்ற முயன்ற தாய்: குடும்பத்தாரின் கண்முன்னே பரிதாப பலி

Report Print Vijay Amburore in இந்தியா

திருவண்ணாமலை அருகே குடும்பத்தகராறில் மகனை காப்பாற்ற சென்ற தாய் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி காசியம்மாள் (70).

கடந்த மாதம் உயிரிழந்த பலராமனின் காரியத்திற்கு உறவினர்கள் யாரும் அதிகம் கலந்துகொள்ளாததால் ஆத்திரமடைந்த அவருடைய இளையமகன் ரவி, நேற்று போதையில் உறவினர்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்துள்ளார்.

அதனை நீண்ட நேரமாக கவனித்து கொண்டிருந்த ரவியின் அண்ணன் பெருமாளின் மகன் அறிவரசன், ஏன் இப்படி உறவினர்களை திட்டிக்கொண்டிருக்கிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அறிவரசன் திடீரென அரிவாளை கொண்ட ரவியை வெட்டியுள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் காசியம்மாள் மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் அறிவரசன் சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த காசியம்மாள் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், காசியம்மாளின் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தப்பியோடிய அறிவரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers