ரூ. 25 கோடி பணத்துக்காக வயதான பெண்ணை இளைஞர் மணந்ததாக கூறப்பட்ட விவகாரம்: ஏற்பட்ட அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் வயதில் மிக மூத்த பெண்ணை இளைஞர் பணத்துக்காக திருமணம் செய்தார் என வதந்தி பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனூப் செபஸ்டின் (29) என்ற இளைஞருக்கும் ஜூபி ஜோசப் (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இருவரின் திருமண புகைப்படங்களும் மலையாள பத்திரிக்கையின் திருமண நிகழ்வு பக்கத்தில் வந்த நிலையில் ஜூபியின் தோற்றத்தை வைத்து அவர் 48 வயது பெண் என்றும், அனூப் 25 வயது ஆண் என்று வாட்ஸ் அப்பில் சில விஷமிகள் தகவல் பரப்பினார்கள்.

அதில், ஜூபியின் ரூ. 25 கோடி சொத்துக்கள் மற்றும் 101 சவரன் நகைக்காக தான் அனூப் வயதான பெண்ணான அவரை திருமணம் செய்தார் எனவும் பரப்பப்பட்டது.

இந்த தகவல் ஜூபி மற்றும் அனூப்பின் வாட்ஸ் அப்கே வந்த நிலையில் அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

தங்களை பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருவரும் பொலிசில் புகார் கொடுத்தனர்.

இதில் ஒன்று அல்லது இருவருக்கு தொடர்பிருக்கலாம் என பொலிசார் நினைத்தார்கள்.

இது குறித்து சைபர் கிரைம் பொலிசார் உதவியுடன் கேரள பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் இதில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் ஐவருக்கும் இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers