மருமகனுடன் தவறான உறவு: வீட்டிலிருந்து தண்டவாளம் வரை சிதறி கிடந்த ரத்தக்கறைகள்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

ஐதராபாத்தில் மருமகனுடன் தவறாக உறவு வைத்திருந்த பெண், கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதாராபாத்தில் உள்ள போராபந்தா ரயில் நிலையத்தில் டிராக்மேனாக பணியாற்றி வந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் கடந்த 2009-ம் ஆண்டு 26 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் மனைவி பி.எட் முடித்துவிட்டு உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.

ஸ்ரீநிவாஸிற்கு மருமகன் முறையுள்ள விஜய்நாயக் என்கிற இளைஞர் கடந்த ஆண்டு, இவருடைய வீட்டில் சில மாதங்கள் தங்கியுள்ளார்.

அப்போது விஜய்நாயக்கிற்கும், ஸ்ரீநிவாஸ் மனைவிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதனை கண்டுபிடித்த ஸ்ரீநிவாஸ், விஜய்நாயக்கை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனையடுத்து மல்கான்கிரியில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டில் விஜய் தங்கி வந்துள்ளார்.

ஆனாலும், ஸ்ரீநிவாஸ் மனைவிக்கும், விஜய்க்கும் இடையேயான தொடர்பு நீடித்து வந்துள்ளது. இதனை அறிந்துகொண்ட ஸ்ரீநிவாஸ் மனைவியுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி, கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, ஒருநாள் இரவு விஜயை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு, யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக ரயில் தண்டவாளத்தில் தற்கொலை போல அவருடைய உடலை போட்டு சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த பொலிஸார், சடலத்தை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்ட போது கால் முழுவதும் சிராய்ப்பு இருப்பதை பார்த்து சந்தேகமடைந்துள்ளனர். மேலும், வீட்டிலிருந்து தண்டவாளம் வரை ரத்தம் சிந்தி கிடப்பதையும் கண்டறிந்துள்ளனர்

பின்னர் அவருடைய மனைவியுடன் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்ட போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் ஸ்ரீநிவாஸ் மனைவி மற்றும் விஜயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers