மகள் திருமணத்திற்காக தமிழக முதல்வரை சந்தித்தார் நடிகர் ரஜினி!

Report Print Vijay Amburore in இந்தியா

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னுடைய இளையமகன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யாவிற்கும், பிரபல தொழிலதிபர் விசாகனுக்கும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினி வழங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers