காதல் கணவரின் இரக்கமற்ற செயல்.. தூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்... திடுக்கிடும் பின்னணி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் பிரியங்கா. இவரும் நவீன் என்ற இளைஞரும் தீவிரமாக காதலித்த நிலையில் இவர்கள் திருமணத்துக்கு பிரியங்கா குடும்பத்தார் முதலில் சம்மதிக்கவில்லை.

பின்னர் மகள் மேல் உள்ள பாசத்தில் அவர்கள் சம்மதம் தெரிவிக்க, கடந்தாண்டு நவீன் - பிரியங்கா திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் நேற்று முன்தினம் பிரியங்கா வீட்டில் தூக்கு கயிற்றில் தொங்கினார்.

அந்த நேரம் பார்த்து அவரின் தாய் அங்கு வந்த நிலையில் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்காவின் உயிர் பிரிந்தது.

இது குறித்து பிரியங்காவின் தாய் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் வரதட்சணை கேட்டு நவீனும், அவர் குடும்பத்தாரும் என மகளை துன்புறுத்தி வந்தனர்.

என் மகள் சாவுக்கு நவீன் மற்றும் அவர் குடும்பத்தார் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers