ரஜினிகாந்த், விஜயகாந்த் படங்களில் நடித்த பிரபல நடிகர் மர்ம மரணம்: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

Report Print Raju Raju in இந்தியா

பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் (57) தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

1980 மற்றும் 90 களில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா, கோவிந்தா, சஞ்சய்தத் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மகேஷ் ஆனந்த்.

இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த பெரிய மருது, ரஜினிகாந்த் நடித்த வீரா படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

2002ல் தனது மனைவியை விவாகரத்து செய்த மகேஷ் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் வேலை பார்க்கும் பெண் வழக்கம் போல நேற்று வந்து கதவை தட்டினார்.

ஆனால் மகேஷ் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை உடைத்து பார்த்து போது மகேஷ் உயிரிழந்த நிலையில் இருந்தார்.

அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

மகேஷ் ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers