கணவரை பிரிந்த பின்னர் வேறு நபருடன் குடும்பம் நடத்திய மனைவி... நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி பொலிசில் சரணடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரை அடுத்த, பகுத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவி (45).

சமையல் வேலை செய்து வந்த தேவி, தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இவரது மகனும், மகளும் வெளியூரில் உள்ளனர். இந்நிலையில் தேவிக்கும், மணி (47) என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வசித்து வந்தனர்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் தேவியும், மணியும் ஒன்றாக மது அருந்தினார்கள்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் தேவியின் தலையில் கல்லைப் போட்டு மணி கொலை செய்தார்.

பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மணியை தேடி வந்தனர்.

இந்நிலையில் மணி பொலிசில் தானாக வந்து சரணடைந்தார்.

தேவியை கொன்றதை அவர் ஒப்பு கொண்ட நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers