பொதுமக்கள் கூட்டத்திற்குள் திடீரென பாய்ந்த லொறி: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!

Report Print Vijay Amburore in இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடத்தில் லொறி பாய்ந்து விபத்து ஏற்படுத்தியதில் பெண் ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று, நெல்வாய் கூட்டு ரோடு பகுதியில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது.

அப்போது உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியானது, கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்கு நின்று பொதுமக்கள் மீது பாய்ந்தது.

இதில் பேருந்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த செங்கல்பட்டு மகிமை இல்லம் என்ற தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

அதேபோல விபத்தில் சிக்கிய ஒரு சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளானது தற்போது இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers