உறவினரை நம்பி தோட்டத்துக்கு சென்ற தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், வாங்கிய கடனை திருப்பி தருவதாகக் கூறி தந்தை, மகன் இருவரையும் உறவினர் ஒருவர் கூலிப்படையால் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விராலிமலை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான வீராச்சாமி. பைனான்ஸ் தொழில் மற்றும் பெட்ரோல் பங்கும் வைத்துள்ளார்.

இவரது உறவினரான மூர்த்தி என்பவருக்கு விராச்சாமி பல லட்சம் ரூபாய் கடனாக கொடுத்து பல கட்டங்களில் உதவியுள்ளார்.

ஆனால் திருப்பி கேட்கும்போதெல்லாம், இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி, பணத்தை கேட்டு நெருக்கடி அளித்துள்ளார்.

இந்த நிலையில் தோட்டத்துக்கு வாருங்கள் கடனை திருப்பிச் செலுத்துகிறேன் என வீராச்சாமியை அழைத்துள்ளார் மூர்த்தி.

இதை நம்பிய அவர் தமது மகன் மற்றும் உறவினர்கள் இருவர் என நால்வரும் மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் மூர்த்தி பணத்தை தராமல் மிரட்டும் தொனியில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வீராச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று மூர்த்தியின் ஆதரவாக கூலிப்படையினர் ஆயுதங்களுடன் புகுந்து வீராச்சாமி உள்ளிட்ட நால்வரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகிய இருவரும் சம்பவயிடத்தில் பலியாகியுள்ளனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிசார், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வீராச்சாமியின் உறவினர்கள் இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகிய இருவரும் ஏற்கெனவே மரணமடைந்துள்ளதால் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers