பேப்பர் கட்டிங் மெஷினை வைத்து துண்டு துண்டாக வெட்டினேன்: சந்தியாவின் கணவர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

சந்தியா கொலை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கொன்றது எப்படி என கணவர் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் மனைவி சந்தியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தவர் எஸ் ஆர் பாலகிருஷ்ணன்.

மனைவி மீது இருந்த சந்தேகத்தால், கடந்த 19ம் திகதி அவளை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதுடன் பாகங்களை வீசியெறிந்தார்.

இரு நாட்கள் கழித்து குப்பை கிடங்கிலிருந்து கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கரணை பொலிசார் விசாரணை நடத்தியதில் பாலகிருஷ்ணன் குற்றவாளி என்பது அம்பலமானது.

இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பேப்பர் கட்டிங் மெஷினை வைத்து சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதாகவும், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாம் இதனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 7 துண்டுகளாக வெட்டியதுடன், அந்த பாகங்களை 4 கவர்களில் போட்டு தான் மட்டுமே பல்வேறு இடங்களில் வீசினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடல் பாகம் எங்கே என கேட்டதற்கு கூவம் ஆற்றுக்கே வந்து அடையாளம் காட்டிய பாலகிருஷ்ணனோ தலை பாகம் எங்கே என்பதை மட்டும் கூற மறுக்கிறாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers