கும்பகோணத்தில் பதற்றம் : பாமக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொலை

Report Print Kavitha in இந்தியா

கும்பகோணத்தில் மதம் மாற கட்டாயப்படுத்தியவர்களை தட்டிக் கேட்ட பாமக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவர் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

கேட்டரிங் ஏஜென்ட்டாக வேலை செய்து வந்த இவர் நேற்று சமையல் ஆர்டர் ஒன்று வந்ததால், வேலைக்கு ஆட்களை தேடி அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு சமையல் வேலை தெரிந்தவர்களை சந்தித்து ராமலிங்கம் பேசிக் கொண்டிருந்த வேளையில் அங்கு 2 பேர் ராமலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்த அந்த கிராமத்து நபர்களிடம் மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர்.

அப்போது பிறகு மதம் மாறினால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்றும் தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தனர்.

திடீரென்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராமலிங்கத்தையும் மதம் மாறுமாறு சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் இதனை ராமலிங்கம் மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து அதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிவிட்டதால் உடன் இருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

பிறகு ராமலிங்கம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் காரிலிருந்து இறங்கவிந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பித்து சென்று விட்டனர்.

இதில் ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததை கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ராமலிங்கத்தை அழைத்து கொண்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றும் வழியிலேயே ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் கும்பகோணத்தில் பகுதியில் திருவிடைமருதூர் மற்றும் திருபுவனத்தில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers